LATEST
கால்பந்து உலகை கலங்க வைத்த மெஸ்ஸியின் அறிவிப்பு! மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் குருணால் பாண்டியா? வாக்குமூலத்தைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க கைது! இன்று நள்ளிரவு முதல் புதிய பாண் விலை! மைத்திரிக்கு வழங்கப்பட்ட தனித்துவமான கௌரவம்! சர்வதேசத் தலைவர்களுடன் பிரதமர் ஹரினி சந்திப்பு! விடுமுறை நாட்களில் ரூ.355 மில்லியன் சாதனை வருமானம்! கால்பந்து உலகை கலங்க வைத்த மெஸ்ஸியின் அறிவிப்பு! மின்னல் மற்றும் திடீர் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை! இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் குருணால் பாண்டியா? வாக்குமூலத்தைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்க கைது! இன்று நள்ளிரவு முதல் புதிய பாண் விலை! மைத்திரிக்கு வழங்கப்பட்ட தனித்துவமான கௌரவம்! சர்வதேசத் தலைவர்களுடன் பிரதமர் ஹரினி சந்திப்பு! விடுமுறை நாட்களில் ரூ.355 மில்லியன் சாதனை வருமானம்!
உள்ளூர்

நேபாளம் செல்லும் இலங்கை பாதுகாப்புப் படையினர்!

August 30, 2026 · National Tamil LK

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். 

நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக இந்நாட்டு பாதுகாப்புப் படையினரைக் கொண்ட நிவாரணக் குழுக்களை அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அநுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நேபாளத்தில் நடந்த சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவமாகும். ஜனாதிபதி தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கம் என்ற வகையில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி ரீதியாக நிவாரணமாக வழங்குவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அதேபோன்று, பாதுகாப்பு அமைச்சின் நிவாரணக் குழுக்கள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிவாரண நிலையம் என்பன உள்ளன. 

அங்குள்ள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எவ்வாறான நிவாரணக் குழுக்களை அனுப்புவது என்பது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. 

இன்னமும் திட்டமிடப்பட்டு வருகிறதே தவிர, அனுப்பப்படும் படையினரின் எண்ணிக்கை அல்லது எவ்வாறான நிவாரணக் குழுக்கள் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. 

ஓரிரு நாட்களில் அதற்கான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யவே அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். எனவே, அருகிலுள்ள ஒரு தெற்காசிய நாடாக நாம் மிகவும் உணர்வுபூர்வமாகச் செயற்படுகின்றோம்.

Related Stories

Explore More ›