LATEST
சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு! சாரதி மருத்துவச் சான்றிதழ் பெறும் நடைமுறை மேலும் எளிதாகிறது! மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை! இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றம் குறித்து IMF உடன் கலந்துரையாடல்! தென்மேற்கு பகுதிகளில் மழை மேலும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பேருக்கு குறைந்தது 200 ஆண்டுகள் சிறை! ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு எதிராக புத்தகக் கண்காட்சியில் கடும் நடவடிக்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த புதிய சட்டம் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் நீடிப்பு! சாரதி மருத்துவச் சான்றிதழ் பெறும் நடைமுறை மேலும் எளிதாகிறது! மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை! இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றம் குறித்து IMF உடன் கலந்துரையாடல்! தென்மேற்கு பகுதிகளில் மழை மேலும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – 15 பேருக்கு குறைந்தது 200 ஆண்டுகள் சிறை! ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு எதிராக புத்தகக் கண்காட்சியில் கடும் நடவடிக்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த புதிய சட்டம்
உள்ளூர்

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை!

September 23, 2026 · National Tamil LK

வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று (23) இலங்கை நேரப்படி காலை 05:30 மணியளவில் வட அட்சரேகை 18.0°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 84.7°E க்கு அருகில் நிலைகொண்டிருந்தது.

இந்த அமைப்பானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு வேளையில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளைக் கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரைபடத்தில் ”Warning” (எச்சரிக்கை) பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் அப்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

வரைபடத்தில் “Advisory” பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

வட அட்சரேகை 07°N முதல் 22°N வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 83°E முதல் 95°E வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அந்த கடல் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று (23) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.

Related Stories

Explore More ›