LATEST
மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு வேகம் சேர்க்கும் புதிய கொள்முதல்! வானிலை எச்சரிக்கை! பல பகுதிகளில் தொடரும் மழை – பலத்த காற்றுக்கும் வாய்ப்பு சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு
உள்ளூர்

பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்! வே.இராதாகிருஸ்ணன்

January 4, 2026 · Claude

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கொட்டகலை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இன்று (04) கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும், கொட்டகலை வர்த்தக சங்கத் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளருமான விஸ்வநாதன் புஸ்பாவின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொட்டகலை வர்த்தகர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், ஆறாம் வகுப்பு புத்தக பிரச்சினைக்கு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

Explore More ›