LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

சிறீதரனின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி?

January 26, 2026 · Claude

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழு தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன்இ பாராளுமன்ற குழு தலைவர் பதவியானது தமிழரசுக்கட்சியின் அரசியல்குழவினாலேயே வழங்கப்பட்டது.

தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் அரசியல்குழுவின் கூட்டத்தில் அந்தநேரத்தில் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டவர்.அந்த நேரத்தில் தேசிய பட்டியல் ஆசனம் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கும் அந்த அரசியல்குழு கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

அதேபோன்று பாராளுமன்றத்தில் கொறடா பதவியை டாக்டர் சத்தியலிங்கத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற நடவடிக்கைகுழுவின் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனையும் நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்ற குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை நாங்கள் நியமித்தோம்.

நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல்குழுவினால் நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றுவதற்கான அதிகாரம் அரசியல்குழுவுக்கே இருக்கின்றது.எந்த குழு நியமித்ததோ அதனை மாற்றுவதற்கு அதிகாரம் அந்த குழுவுக்கு உண்டு.

தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் ஆலோசனையினை அவர் ஏற்றுக்கொள்ளமறுத்ததன் காரணத்தினால் அரசியல்குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தினை மீளப்பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.

அரசியல்குழு அவர்மீது நம்பிக்கைவைத்து ஏகமனதாக பாராளுமன்ற குழத்தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது.அரசியல்குழு இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல்பேரவையிலிருந்து இராஜினாமா செய்யவேண்டும் என்ற ஆலோசனையினை வழங்கியிருந்தது.

நேற்றை தினம் சுமார் 04மணிநேரங்கள் அதே கருத்தினை அவரிடம் வலியுறுத்தியிருந்தோம்.ஆகவே கட்சியின் எந்த உயர்குழு அவருக்கு அந்த பதவியினை வழங்கியதோ அந்த குழுவின் ஆலோசனையினையும் வற்புறுத்தலையும் அவர் செவிமடுக்கவில்லையென்றால் அந்த பதவியை அவரிடமிருந்து எடுப்பது என தீர்த்தோம்.

இதேநேரம் இது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கேட்டபோது அவ்வாறான எந்த இறுதி முடிவும் இதுவரையில் எடுக்கவில்லையென தெரிவித்தார்.

Related Stories

Explore More ›