LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

யாழுக்கு மணல் கடத்தி வந்த இருவர் கைது – ஒரு டிப்பர் தப்பியோட்டம்

January 27, 2026 · Claude

யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி பிடித்து, டிப்பர் சாரதி மற்றும் உதவியாளரை கைது செய்துள்ளனர்.

மற்றுமொரு டிப்பர் வாகனம் பொலிசாரின் கட்டளையை மீறி தப்பி சென்றுள்ள நிலையில், அது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மருதனார்மடம் பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸார் வீதியில் பயணித்த இரு டிப்பர் வாகனங்களை வழிமறித்த நிலையில், பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை தொடர்ந்து சாரதிகள் செலுத்த முற்பட்ட வேளை ஒரு டிப்பர் வாகனத்தை பொலிஸார் மடக்கி பிடித்த நிலையில் மற்றைய வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட வேளை, உரிய அனுமதிகள் இன்றி கிளாலி பகுதியில் இருந்து மணலை ஏற்றி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த டிப்பர் வாகனங்கள் கொடிகாமம், சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளை தாண்டி சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி சென்ற நிலையில் சுன்னாகம் பொலிஸாரினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›