LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026 · Claude

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.

பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றார்கள் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொலிஸார் வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அது தொடர்பில் 10ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் 11ஆம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதியே பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே 18 வயதாக உள்ளது. தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன.

Related Stories

Explore More ›