LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
விளையாட்டு

இந்தியா அணி வெற்றி!

February 13, 2026 · Claude

20க்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான நேற்றைய (12) போட்டியில் இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் இஷான் கிஷன் 61 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இந்நிலையில் 210 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நபீபியா அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

Related Stories

Explore More ›