LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

அல்லைப்பிட்டி சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம்

February 22, 2026 · Claude

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் குறித்த போராட்டம் நடைபெற்றது.

அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும் , அதன் போது வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

நிற்காமல் சென்ற வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும், அதொரு பொலிஸாரின் திட்டமிட்ட படுகொலை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழும்பி வரும் நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் , சம்பவம் தொடர்பிலான அடுத்த வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›