LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாடு : யாழ் மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

March 12, 2026 · Claude

நேற்றைய தினம் புதன்கிழமை தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் நடைபெற்றுள்ளது.

பிரஜா சக்தி வலுவூட்டல் செயற்பாட்டுக்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கையில், 

இதனை வினைத்திறன்மிக்கதாக பயன்படுத்த வேண்டும் என கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

கிராம மக்களோடு கலந்துரையாடி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப வேண்டும். அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும். நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பொருளாதார சமூக நிலை மேம்பாடு அடைய வேண்டும்.

கிராமிய மக்களின் வறுமையை அடையாளம் கண்டு எவ்வாறு அவர்களின் வாழ்வை மீட்க முடியும் எனவும் அதற்கான தீர்வு கிடைக்கும் திட்டங்களை அமுல்படுத்துவதுடன் மூலம் நாட்டின் வறுமை இல்லாது ஒழிப்பதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.  

 2025 ஆம் ஆண்டு அதிகமான டொலர்கள் வெளிநாட்டு செலாவணியாக சம்பாதித்துள்ளதாகவும், இலங்கை வரலாற்றிலேயே அதிக வெளிநாட்டு செலாவணி சம்பாதித்துள்ளதாக அவ் வருடம் காணப்படுகிறது என தெரிவித்தார்.

Related Stories

Explore More ›