களுத்துறை பகுதிகளில் நீர்வெட்டு

கெத்தேன முதல் களுத்துறை வரையிலான பிரதான விநியோகக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாகப் பல பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, வஸ்கடுவ, மொல்லிகொட, மொரந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, நாகொட, கட்டுக்குருந்த மற்றும் போம்புவல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
நாளை முற்பகல் 10:00 மணியளவில் நீர் விநியோகத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow & Share




