LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

நாகர் கோவில் பகுதியில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு….!

January 14, 2026 · Claude

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்றைய தினம் துன்னாலை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது

இதன் போது 14 கிலோ கிராம் எடையுள்ள 9 பொதிகள் அடங்கிய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மேலதிக விசாரணைகளுக்கு மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது மற்றும் மேலதிக விசாரணைகளையும் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

Explore More ›