ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்

ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், பாரிய கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஈரான் சர்வதேச சமூகத்திற்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், புஷெர் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இது அணுசக்தி பாதுகாப்பு விதிகளை மீறும் செயல் என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸிற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
Follow & Share




