LATEST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!
உள்ளூர்

ஜீவன் தொண்டமானை சந்தித்த பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர்

February 5, 2026 · Claude

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றிருந்தது.

தமிழ்நாடு, திருச்சி – சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துகொண்ட பின்னர், நயினார் நாகேந்திரன் அவர்கள் ஜீவன் தொண்டமான் எம்.பி அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருந்தபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள், நயினார் நாகேந்திரன் அவர்களை பொன்னாடையுடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது, பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது அழைப்பை ஏற்று, திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துக்கொள்ள வருகைத் தந்த நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு, ஜீவன் தொண்டமான் அவர்கள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

Related Stories

Explore More ›