LATEST
UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!
விளையாட்டு

ஆறுதல் வெற்றியா? அரையிறுதி வாய்ப்பா?

February 28, 2026 · Claude

டி20 உலக கிண்ண தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இலங்கை – பாகிஸ்தான் அணி மோதும் போட்டி இன்று கண்டி பல்லேகலையில் இடம்பெறவுள்ளது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் நியுசிலாந்து தோல்விடையந்த நிலையில் குழு B யிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணியைத் தீர்மானிப்பதில் இன்றைய போட்டி முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இந்நிலையில் சுப்பர் 8 சுற்றில் ஒரு போட்டியிலேனும் வெற்றிபெறாத இலங்கை அணி இன்று ஆறுதல் வெற்றியையாவது பெறுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் போட்டியின் வெற்றி தோல்வி, பாகிஸ்தான் அல்லது நியுசிலாந்து அணிகளின் இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் அடுத்தகட்ட நகர்வைத் தீர்மானிக்கும்.

புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது. இதனால் நியுசிலாந்து இன்றி பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமாயின், அவர்கள் இன்று முதலில் துடுப்பெடுத்தாடினால் இலங்கைக்கு எதிராக குறைந்தது 64 ஓட்டங்களினால் வெற்றி பெற வேண்டும்.

அவ்வாறின்றி இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடினால், இலங்கை நிர்ணயிக்கும் இலக்கை அதிகபட்சம் 13.1 ஓவர்களுக்குள் பாகிஸ்தான் அடைய வேண்டும்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் குறித்த போட்டியும் இலங்கையில் நடைபெறும்.அவ்வாறு இல்லையெனில், இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடைபெறும் இறுதிப் போட்டியாக இன்றைய போட்டி அமையும்.

Related Stories

Explore More ›