LATEST
இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!
உள்ளூர்

வவுணதீவு பகுதி சம்பவத்தில் திடீர் திருப்பம்! பாதிக்கப்பட்ட பெண் நேரடி வாக்குமூலம்

March 31, 2026 · Claude

நான் அனிறைய தினம் காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பிற்கு போவதற்காக  வவுணதீவு சந்தியில் குழந்தையுடன் பஸசுக்கு சென்றிருந்தேன் அங்கு பஸ்சுக்கு காத்திருந்த வயோதிப பெண் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார் அவருக்கு அருகில் நான் சென்று நின்றேன் அப்போது எங்களுக்கு  ஒரு ஆட்டோ வந்தது நிறுத்தி எங்கே போகப்போகின்றீர்கள் என கேட்டார் அப்போது நான் நகருக்கு என்றேன் அப்போது ஆட்டோவில் ஏறுமாறு கேட்டனர் நான் என்னிடம் பணம் இல்லை எவ்வளவு எனகேட்டேன் 100 ரூபா என்றனர் அப்போது நான் குழந்தையுடன் ஏறினேன்அதில் அங்கு இருந்த பயோதிப பெண்ணும் ஏறினார்

ஆட்டோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்தபோது மட்டு போதனா வைத்தியசாலையில் ஆட்டோவில் ஏறிய அந்த வயோதிப பெண் இறங்கினார் அப்போது நீங்கள் எங்கே போகப் போகின்றீர்கள் என கேட்டனர் அப்போது நான் சத்தார்  புடவைக்கடை வீதியில் விடுமாறு தெரிவித்த நிலையில் அங்கு என்னை கொண்டு சென்று விட்டுவிடும் போது ஆட்டோவில் இருந்த பெண் தான் சாறி எடுக்கப் போவதாகவும் நீங்கள் ஆட்டோவில் வருமாறு கேட்டார் நான் சரிவருகின்றேன் தான் சத்தர்; கடையடியில் காத்திருப்பதாக தெரிவித்தார்

அப்போது நான் குழந்தையுடன் அங்கிருந்து நகைகடைக்கு சென்று ஈடுவைத்த தங்க மோதிரத்தை மீள்வதற்கு 24 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தி அதனை மீள் எடுத்துக் கொண்டு அந்த பெண் சொன்ன கடைக்கு முன்னால் வந்தபோது அவர் அங்கு காத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை சந்தித்ததும் அவர் ஓட்டோ காரருக்கு தொலைபேசியில் கதைத்தார் அப்போது அவர் மணிக்கூட்டுகோபுரம் பகுதிக்கு கூட்டி வருமாறு தெரிவித்தார்

நானும் அந்த பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டு கோபுரம் நோக்கி சென்றோம் அவர் எனக்கு பின்னால் வந்தார் அங்கு நின்ற அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டோம் அதன் பின்னர் அங்கிருந்து பொதுசந்தை வீதி ஊடாக சென்று அங்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கிவ போய்விட்டு 10 நிமிடத்தால் வந்து அங்கிருந்து பிரதான பஸ்தரிப்பு நிலையத்து வீதியால் வவுணதீவு நோக்கி சென்று கொண்டிருந்தார்

அப்போது வலையிறவு பாலத்தால் சென்று கொண்டிருந்தபோது அந்த பெண் 3 யூஸ் போத்தல் எடுத்துக் கொண்டார் எனது மகளுக்கும் அவவுக்கும்  பச்சைகலர் யூஸ் போத்தலை எடுத்து கொண்டு என்கு விளாம்பழ யூஸ் தந்தார் அதனை குடித்துக் கொண்டேன் அப்போது வவுணதீவு சந்தியில் அந்த பெண் இறங்கி கொண்டார் அதன் பின்னர் இளைஞன் ஒருவர் அந்த ஆட்டோவில் தாள்கத்தியுடன் ஏறிக் கொண்டார்

அதன்போது நான் கேட்டேன் என்ன தாள் கத்தியுடன் ஏறுகின்றார் என அப்போது அவர் வீட்டில் புல்லு இருக்காம் மாட்டுக்கு புல்லு வெட்டுவதற்கு செல்வதாக தெரிவித்துக் கொண்டநிலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நான் என்னை தாண்டியடியில் விடுமாறு தெரிவித்தபோது சரி என தெரிவித்துக் கொண்டநிலையில் கன்னங்குடா சந்தியால் சென்று கொண்டிருந்தபோது தாண்டியடி நோக்கி  செல்லாமல் பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கி பிரயாணித்த போது நான் கேட்டேன் என் இந்த வீதியால் போகின்றீர்கள் என அப்போது அந்த இஐளஞனை கொண்டு சென்று விட்டுவிட்டு உங்களை கொண்டு சென்று விடுவதாக தெரிவித்தார் ஒரு இரு நிமிடங்களில் நான் மயக்கமுற்று ஒன்றும் தெரியாது

இந்த நிலையில் வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டது கட்டிலில் என்று மேல் நோக்கி பார்த்த போது வானம் தெரிந்தது அப்போது என்னடா வானம் தெரியுது என கட்டையில் காலை வைத்து கொண்டு நீரிர் கீழ் நோக்கி ஒரு தரம் மூழ்கினேன் பின்னர் மேல் நோக்கி வந்தேன் இவ்வாறு இரண்டுதடவை செய்தேன் நான் முற்றாக நீரில் நனைந்து கெண்டே நிலையில் சூன்றாம் தரம் மூழ்கி எழும்பி கொண்டு அம்மா அம்மா என சத்தமிட்டேன் அதன் பின்னர் கணவரை கூப்பிட்டு சத்தமிட்டேன் அதன் பின்னர் மீன்பிடிக்க போனீர்கள் இவ்வளவு நேரரும் என்ன செய்கின்றீர்கள் என கத்தினேன் அதன் பின்னர் பிள்ளை பிள்ளை என கத்தினேன் அதன் பின்னர் யாhர் என்று தெரியாது கையில் கயிற்றை இழத்தனர் என்றார்.

Related Stories

Explore More ›