LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

January 29, 2026 · Claude

நிரந்தர ஆசிரியர் நியமனங்களை கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாகவும் இன்றைய தினம் தொடர்கின்றது.

குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களுக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த பல மாதங்களாக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கு அரசாங்கத்தினால் எந்தவித தீர்வும் கிடைக்காத நிலையில், தற்போது கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த போராட்டம் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஒரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏனைய நபர்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அந்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

மட்டக்களப்பை சேர்ந்த குகதாசன் உடல்நிலை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்து வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருந்த குகதாசன் என்பவரே இன்று நான்காவது நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories

Explore More ›