LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது! கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு! தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்! 124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
விளையாட்டு

இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதல்!

February 15, 2026 · Claude

இந்த வருட இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, திட்டமிட்டபடி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இப்போட்டி, உள்ளூர் நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இந்தப் போட்டியை புறக்கணிப்பதாக முன்னதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த போதிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கோரிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு தீர்மானித்தது. 

இந்நிலையில், குறித்தப் போட்டிக்கான அனைத்து டிக்கட்டுக்களும் நேற்றைய தினம் விற்றுத் தீர்ந்துள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

எனவே ரசிகர்கள் டிக்கட் பெறும் நோக்கில் வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதேநேரம் இன்றைய கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. 

Related Stories

Explore More ›