ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் அபாயம் அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை அணுகவோ அல்லது அதற்குள் நுழையவோ அமெரிக்கப் படைகள் முயற்சித்தால், அவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் இராணுவம் கடுமையாக எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு செல்லும் நோக்கில், “புராஜெக்ட் ஃப்ரீடம்” எனப்படும் கடற்படை நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கத் தரப்பின் தகவலின்படி, குறித்த கடற்படை நடவடிக்கைகள் அடுத்த சில மணிநேரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மத்திய கிழக்கில் இராணுவ பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.




