LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு

March 4, 2026 · Claude

காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்இ கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமானப்படை கண்காணிப்பு விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையேஇ இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்இ குறித்த கப்பல் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை என்று தெரிவித்தார்.

குறித்த கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Related Stories

Explore More ›