யாழில். குளத்தில் மூழ்கிய இளைஞன் பலி

யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞன் ஆவார்
செவ்வாய்க்கிழமை (09) அன்று மூன்று இளைஞர்கள் பொழுது போக்குக்கhக மீன் பிடித்தயில் ஈடுப்பட்ட போது உயிரிழந்த இளைஞன் வீசிய தூண்டில் குளத்தினுள் விழுந்ததை அடுத்து அதனை எடுக்க குளத்திற்குள் இறங்கிய இளைஞன் குளத்தினுள் மூழ்கி காணாமல் போனார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (09) அன்று கடற்படையின் சுழியோடி வீரர்கள் குளத்தினுள் இறங்கி தேடி இளைஞனின் சடலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
Follow & Share




