LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

யாழ். கோட்டைக்குள் உள்ள அற்புத மாதா ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

January 27, 2026 · Claude

யாழ்ப்பாண கோட்டைக்குள் காணப்பட்ட அற்புத மாதா ஆலயம் சிதிலமடைந்துள்ள நிலையில், அதனை அதன் வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க தொல்லியல் துறையால் இதுவரை எந்தச் சரியான முயற்சியும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், யாழ்ப்பாண கோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் , கோட்டை பகுதியில் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொல்லியல் திணைக்கள உத்தியோகஸ்தர்களுடனும் கலந்துரையாடினார்

அதேவேளை கோட்டை பகுதியை சுற்றியுள்ள தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சுற்றி தொல்லியல் திணைக்களத்தினால் , எல்லை கற்கள் நாட்டப்பட்டுள்ளது.

எல்லை கற்கள் நாட்டுவது குறித்து , எந்த தரப்புடனும் கலந்துரையாடாது , அவற்றை நாட்டியுள்ளமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , அவற்றினையும் சுமந்திரன் பார்வையிட்டார்.

Related Stories

Explore More ›