LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

அக்கரபத்தனையில் ஜீவன் தொண்டமானால் நிவாரணம் வழங்கி வைப்பு

December 3, 2025 · Claude

அக்கரபத்தனை தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டார்.

டயகம கிழக்கு 1ம் பிரிவு, டயகம மேற்கு 3ம் பிரிவு, டயகம மேற்கு 4ம் பிரிவு, போர்ட்மோர், வெவர்லி, ஆக்ரோயா, பெல்மரோல், மெரேயா, கொன்டோனியா, பிரேம்மோர், தங்ககலை, ஹோல்புரூக் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் அவர் வழங்கி வைத்தார்.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நிலவும் கடும் காலநிலை சீர்கேடு காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் பலர் தமது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது டயகம பிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு குழந்தைகள், வீடுகள் சேதமடைந்த குடும்பங்களை பாவனையற்று கிடக்கின்ற தோட்ட நிறுவன சேவையாளர் இல்லங்களின் தற்காலிகமாக குடிப்பெயர்வதற்கான வாய்ப்பை தோட்ட முகாமையாளரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தோட்டநிர்வாகமும் சம்மதம் தெரிவித்ததுடன், நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் குறித்த வீடுகளை தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டார்.

மேலும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளையும் வழங்கும் செயற்பாடானது மலையக பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் எதிர்வரும் நாட்களுக்குள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், உதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Related Stories

Explore More ›