மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான வழக்கை மார்ச் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
மனுஷ நாணயக்கார தனது அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Follow & Share




