ஜனாதிபதியின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த உன்னத நிகழ்வான உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு என்பது வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல, அது மனிதாபிமானம், அன்பு மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை உலகிற்கு மீண்டும் நினைவூட்டும் ஒரு கலாசார பண்டிகையாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால், இருளை வென்று ஒளியையும், பயத்தை வென்று நம்பிக்கையையும் அடைய முடியும் என்பதை இயேசுவின் வாழ்வு நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். பகைமையை விடுத்து, அமைதியையும் சகவாழ்வையுமே மக்கள் விரும்புகின்றனர். இந்த உன்னதமான தினத்தில் அமைதியை நோக்கிய பாதை மலர வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.




