LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

ஜனாதிபதியின் மகா சிவாராத்திரி வாழ்த்து செய்தி

February 15, 2026 · Claude

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர்.

மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நாளாக கருதப்படுகிறது.

இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சங்கமத்தையும்இ சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்துவதையும் நினைவுகூறும் விதமாக அமைந்துள்ளது.

இது உலகம் மற்றும் வாழ்க்கையின் “இருளை வெல்வதை” குறிக்கிறது.

அனைத்து மனித உறவுகளையும் மதிக்கும்இ ஒழுக்கநெறியுள்ள மற்றும் கருணையுள்ள சமூகத்தை உருவாக்குவதில் இதுபோன்ற மத மற்றும் கலாசார நிகழ்வுகள் மிக முக்கியமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அகங்காரத்தை நீக்கிஇ உள்ளங்களில் ஆன்மீக உயிர்ப்பை ஏற்படுத்தும் மகா சிவராத்திரி சமய சடங்குகள்இ நேர்மைஇ தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு போன்ற உண்மைப் பண்புகளின்படி வாழ நம்மை நெறிப்படுத்துக்கின்றன.

மேலும்இ மகா சிவராத்திரியின் ஆன்மீக செய்தி நமது சமூக உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் நான் பார்க்கிறேன்.

அண்மைக்கால நினைவுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்ட பின்னர்இ உறுதியுடனும் திட்டமிடலுடனும் மீண்டெழுந்துஇ அரசியல்இ பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துடன் புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம்.

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்துஇ நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கையில் உள்ள இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாக அமைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

Explore More ›