LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

அருட்தந்தை பொலிஸாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு – நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

January 27, 2026 · Claude

அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன பொலிஸாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27)காலை 9 மணி அளவில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக தெல்வத்தை சந்தியில்  அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர சபை முன்றலில் இருந்து நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதி ஊடாக தெல்வத்தை சந்திக்கு பேரணியாக வந்து அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அருட்சகோதர, சகோதரிகள் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

பின்னர் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

Related Stories

Explore More ›