ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் நிலைப்பாடு: UNP உடன் மட்டுமே இணைவு!

ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்படும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தின் மூலம் பின்வருமாறு விளக்கினார்:
“நானும் ஒரு பெண்ணும் காதலிப்பதாக வைத்துக் கொள்வோம். தந்தை அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறோம். பின்னர் தந்தை நோய்வாய்ப்படும்போது, அவரைப் பார்ப்பதற்காக எமது தாய் வீட்டிற்கு வருகிறோம். அங்கே எம்மால் தங்கியிருக்க முடியும் அல்லவா?” என அவர் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியே தங்களின் ஆரம்ப வீடு என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
Follow & Share




