சமநிலையில் நிறைவடைந்த தொடர்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டி-20 போட்டி நேற்றைய தினம் தம்புள்ளை மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
மழை காரணமாக போட்டிக்கு தடை ஏற்பட்ட நிலையில் 12 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 160 ஓட்டங்களை பெற்றது.
எனினும் குறித்த இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
இதனூடாக தொடர் 1 – 1 என சமநிலையில் நிறைவடைந்தது.
Follow & Share




