பாடசாலையொன்றில் துப்பாக்கி பிரயோகம் : 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பள்ளியில் மர்மநபர்கள் இரண்டு பேர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தில் சந்தேக நபர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபரில் ஒருவர் பெண் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு நபரை தேடி வருவதாக என பொலிசார் தெரிவித்துள்ளனர் .
பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow & Share




