LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை

February 28, 2026 · Claude

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்கள் வீதியோர கடைகள் விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து இன்று மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டுதலின் கீழ் வீதியோர கடைகள் உணவகங்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது உணவுப் பொருட்களின் தரம் சேமிப்பு முறை சுற்றுப்புறத் தூய்மை பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் சமயலறைகள் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இது தவிர மனித பாவனைக்கு உதவாத தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை எடுப்பதற்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories

Explore More ›