LATEST
கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!
விளையாட்டு

உலக கிண்ணத் தொடரில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வி

February 26, 2026 · Claude

உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. 

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இலங்கை அணியை பொருத்தவரையில் இன்று ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஸன மற்றும், துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், துனித் வெல்லாலகே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்நிலையில் 169 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

Explore More ›