மேற்கிந்திய தீவுகளுக்கு இலங்கை அணி பயணம் – முழுமையான கிரிக்கெட் தொடர் அறிவிப்பு!

டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகள் கொண்ட தொடர் ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லவுள்ளதாக இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடரில் 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபதுக்கு-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளதுடன், அதன் முதலாவது போட்டி ஜூன் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Follow & Share




