LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

December 10, 2025 · Claude

தம்பலகாமம் பிரதேச கோயிலடியை அண்டிய வயல் நிலங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் மூழ்கிய வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது

தொடர்ச்சியான கனமழை காரணமாக நெற் செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.

விவசாயிகள் இதனால் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி சில வயல்களில் மீண்டும் நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

திட்வா புயல் காரணமாக வெள்ள நீரின் அளவு அதிகரிப்பினாலும் பல வயல் நிலங்கள் அழிவுற்ற நிலையில் இயல்பு நிலை திரும்பி மீண்டும் தற்போது வெள்ள நீரில் மூழ்கியதால் பாரிய நட்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால் தம்பலகாமம் சம்மாந்துரைவெளி பிச்சைவெளி கோயிலடி பகுதி நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தர ஆவணம் செய்யுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Related Stories

Explore More ›