LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

கார் கடைக்குள் புகுந்ததால் விபத்து; மூவர் படுகாயம்!

December 25, 2025 · Claude

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மானிப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் , ஆபத்தான முறையில் காரினை செலுத்தி வந்த நபரை வழிமறித்துள்ளனர். 

பொலிசாரின் கட்டளையை மீறி காரினை சாரதி தொடர்ந்து செலுத்தி சென்றமையால் , குறித்த காரை பொலிஸார் துரத்தி சென்றனர். 

அதன் போது கார் கட்டுப்பாட்டை இழந்து நவாலி மூத்தநயினர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடை தொகுதி ஒன்றிற்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானது. 

அதில் தையல் கடை ஒன்றினுள் நின்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் , அங்கிருந்தவர்களால் அவர்கள் மீட்கப்பட்டு , யாழ் .  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மூவரில் ஒருவர் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து சம்பவம் தொடர்பில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Related Stories

Explore More ›