LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

புதிய வீட்டில் ஜனாதிபதியுடன் புத்தாண்டு கொண்டாட்டம் !

April 14, 2026 · Claude

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு சடங்குகளில் கலந்துகொள்ளும் நோக்கில், டித்வா புயலினால் சேதமடைந்து, அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்ன என்பவரது புதிய வீட்டிற்குள் குடிபுகும் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (14) முற்பகல் கலந்துகொண்டார். 

முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையின் கீழ் ஐந்து மாத காலப்பகுதியில் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். 

அதேவேளை, இப்பிரதேச செயலகப் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. 

பிரதேச மக்களுடன் இணைந்து புதிய வீட்டில் புத்தாண்டு சடங்குகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, அங்கிருந்த அனைவருக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

அத்துடன், ஜனாதிபதியை அன்புடன் வரவேற்ற பிரதேச மக்கள், அவருக்கும் தமது புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

Explore More ›