LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

வடக்கு ,கிழக்கில் விவசாயம் சார்ந்த சிக்கல்களுக்கு அரசாங்கம் உடன் தீர்வு வழங்க வேண்டும்!

May 6, 2026 · Claude

இன்றைய தினம் பாராளுமன்ற விவசாய கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள்
அமைச்சருக்கான கேள்வி பதிலின் போது. 2025ஆம் ஆண்டுநவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட   தித்வா   புயல்  அனர்த்தம்  காரணமாகஇலங்கையின் உள்நாட்டு உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தேசிய அரிசி உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பை வழங்கும் 2025 மற்றும்  2026 ஆண்டுகால  பெரும் போகச் செய்கை  அதன்ஆரம்பக் கட்டத்திலேயே இந்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டது.

ஒவ்வொரு பெரும் போகத்திலும் பொதுவாக 800, 000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின்படி இம்முறை 603,960 ஹெக்டேயரில் மாத்திரமே பயிர்ச் செய்கை செய்யப்பட்டுள்ளது.

இதில் பெரும் பகுதி அதிக மழை வீழ்ச்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக அழிவடைந்துள்ளது. தேயிலை, தென்னை, பழவகைகள் மற்றும் வீட்டுத்தோட்டப் பயிர்கள் உள்ளிட்ட ஏனைய வருடாந்த பயிர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

பயிர் அழிவினால் விவசாயிகளின் பணப்புழக்கம்பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 சிறு போகச் செய்கை ஆரம்பமாகவுள்ளதால்,விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் பின்வரும் கேள்விகளை வினாவியுள்ளார்.

  • 2025 / 2026  பெரும் போக நெல் உற்பத்தி தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய
    மதிப்பீடு எத்தனை மெட்ரிக் தொன்களாகும்? அத்துடன் 2026 ஆம் ஆண்டில் தேசிய
    மட்டத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிர்வு
    கூறப்பட்டுள்ளதா?

  • குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சூறாவளியினால்
    பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் குறித்து அவதானம் செலுத்தி, பிரதான
    நீர்த்தேக்கங்களிலிருந்து நீர்ப்பாசன நீரை விடுவித்தல், சான்றளிக்கப்பட்ட
    நெல் விதைகளை வழங்கல் மற்றும் உரம் விநியோகம் உட்பட 2026 சிறு போகச்
    செய்கையினை உரிய காலத்தில் உறுதிப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள
    குறிப்பிட்ட நடவடிக்கைகள் யாவை?

  • சில மாவட்டங்களில் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும்
    மேலாகியும் விவசாய சேவை நிலையங்களுக்கு இதுவரை போதுமான அளவு அல்லது உரிய
    நேரத்தில் உரம் கிடைக்கவில்லை. மணல் கலந்த மண் என்பதால் ஒரு ஏக்கருக்கு
    குறைந்தது 100 கிலோ கிராம் யூரியா தேவைப்படும் நிலையில், உரம்
    வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ள CCC ( PVT) LTD  நிறுவனம் மற்றும்
    அரசாங்க உரக் கூட்டுத்தாபனம் விநியோகத்தைத் தாமதப்படுத்துவதால்
    விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் விரைவான
    நடவடிக்கை எடுக்கப்படுமா?

Related Stories

Explore More ›