வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான வகையில் ஆயுதத்துடன் அப்பகுதியில் நடமாடிய நபர் ஒருவர் பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அமெரிக்க இரகசிய பாதுகாப்புப் பிரிவினரும் பொலிஸாரும் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
கடுமையாக காயமடைந்த அந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் இடம்பெற்றதும் வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டதுடன், பல வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
இந்த துப்பாக்கிச் சம்பவத்தில் அருகில் இருந்த மற்றொருவரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், பாதுகாப்பு அதிகாரிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




