எல்ல – வெல்லவாய வீதியில் பயங்கர விபத்து!

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில் எல்ல-வெல்லாவய பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து இடம்பெற்ற போது, முச்சக்கர வண்டியில் மூன்று பேர் பயணித்துக்கொண்டிருந்தனர். விபத்தில் மூவரும் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் எல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மற்ற இருவரும் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் விபத்து குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow & Share




