LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் : மூவர் கைது

November 26, 2025 · Claude

தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தமலை பகுதியில் நடப்பட்ட தொல்லியல் திணைக்கள பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் சந்தேகத்தின் பெயரில் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர், அடங்கலாக தாந்தாமலை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அறிந்தவுடன் செவ்வாய்கிழமை தினம் இரவு 10.00 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னனி துணை செயலாளர் சட்டத்தரணி அ.நிதான்சன், மண்முனை தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ.கிரேஷ்குமாரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வை.தினேஷ்குமார், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் எனப்பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருந்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Stories

Explore More ›