நட்பு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி ஆலோசனை

அமெரிக்காவிடம் எண்ணெய்யை கொள்வனவு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.வெள்ளை மாளிகையில் வைத்து இன்று ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஈரானுடனான யுத்தம் ஒரு தீர்க்கமான முடிவை எட்டியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு ஒரு அதிரடி ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து எண்ணெயை கொள்வனவு செய்யுமாறும் தம்மிடம் எரிபொருள் ஏராளமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் . சற்று தாமதமான தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
அமெரிக்கா முன்னரே விடுத்த கோரிக்கையை நிராகரித்த நாடுகளைச் சாடிய அவர், “இதை நீங்கள் முன்னரே செய்திருக்க வேண்டும், நாங்கள் கேட்டபோது எங்களுடன் சேர்ந்து செய்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
Follow & Share




