LATEST
சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்! சுரேஷ் சல்லே வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கத்தார் ஏர்வேஸ் முழு வீச்சில் மீண்டும்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்பா? சொகுசு வாகனக் கடத்தல் விவகாரத்தில் CID சிறப்பு விசாரணை! இலங்கையின் இதய சிகிச்சையில் புதிய மைல்கல்! தேர்வு எழுதுபவர்களுக்கு தேசிய காப்பீட்டு அட்டை (NIC) வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும். இன்றைய வானிலை முன்னறிவிப்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ! UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!
உள்ளூர்

வவுனியா பம்பைமடு சித்த ஆதார வைத்தியசாலைக்கு சத்தியலிங்கம் எம்.பி விஜயம்

December 11, 2025 · Claude

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் இன்று வவுனியா பம்பைமடு சித்த ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியினால் வைத்தியசாலையின் உடனடி தேவைப்பாடுகள், ஆளனிப்பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்தபோது குறித்த வைத்தியசாலையோடு இணைந்தவாறு ஆரம்பிக்கப்பட்ட “வைகறை” எனும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை நிலையத்தினையும் பார்வையிட்டிருந்தார்.

மிகுந்த சிரமங்களின் மத்தியில் உருவாக்கப்பட்ட குறித்த சிகிச்சை நிலையம் தற்போது பாவிக்கப்படாது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

குறித்த விடயங்கள் தொடர்பில் பார்வையிட்டதுடன் அவற்றை சம்மந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று உரியதும், விரைவானதுமான நடவடிக்கை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Related Stories

Explore More ›