மரக்கறிகளின் விலையில் உயர்வு

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற வானிலையுடன் மரக்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் மொத்த விலைகள் உயர்வடைந்துள்ளன.
இதற்கமைய,
ஒரு கிலோ கரட் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும்
ஒரு கிலோ லீக்ஸ் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையும்
ஒரு கிலோ போஞ்சு 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையும் உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் 30 ரூபாவிற்கு விற்பனையான ஒரு கிலோ பூசணிக்காயின் விலை 130 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.
Follow & Share




