LATEST
உலக சந்தையை உலுக்கும் எண்ணெய் விலை உயர்வு! நாட்டில் தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு குற்றப்பத்திரிகை! ஈரானுக்கு எதிராக பொருளாதாரப் போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! புனித தந்த தாதுவை சுமந்து சென்ற ‘ஜனராஜா’! ஒரு மாதத்திற்குள் புலமைப்பரிசில் பெறுபேறுகள்! இடியப்பம், புட்டு விற்பனைக்குப் பின்னால் கஞ்சா வியாபாரம்! உடல்நலக்குறைவால் சௌகார் ஜானகி வைத்தியசாலையில்! உலக சந்தையை உலுக்கும் எண்ணெய் விலை உயர்வு! நாட்டில் தொடர்ந்தும் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு குற்றப்பத்திரிகை! ஈரானுக்கு எதிராக பொருளாதாரப் போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! புனித தந்த தாதுவை சுமந்து சென்ற ‘ஜனராஜா’! ஒரு மாதத்திற்குள் புலமைப்பரிசில் பெறுபேறுகள்! இடியப்பம், புட்டு விற்பனைக்குப் பின்னால் கஞ்சா வியாபாரம்! உடல்நலக்குறைவால் சௌகார் ஜானகி வைத்தியசாலையில்!
உள்ளூர்

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

August 20, 2026 · National Tamil LK

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

Explore More ›