LATEST
5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்… அரசின் புதிய இலக்கு! ரயில்வே தொழிற்சங்கம் வேலைநிறுத்த எச்சரிக்கை! 20 ஆண்டு காத்திருப்புக்கு முடிவு… ரூமேஷ் தரங்கா தங்கம்! கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நிலை! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முக்கிய திருப்பம்! ஓகஸ்ட் மாத எரிபொருள் விலை பட்டியல் வெளியீடு! இலங்கைக்கு கோடிக்கணக்கான டொலர் உதவி! 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்… அரசின் புதிய இலக்கு! ரயில்வே தொழிற்சங்கம் வேலைநிறுத்த எச்சரிக்கை! 20 ஆண்டு காத்திருப்புக்கு முடிவு… ரூமேஷ் தரங்கா தங்கம்! கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கை பொருளாதாரத்தின் தற்போதைய நிலை! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் முக்கிய திருப்பம்! ஓகஸ்ட் மாத எரிபொருள் விலை பட்டியல் வெளியீடு! இலங்கைக்கு கோடிக்கணக்கான டொலர் உதவி!
உள்ளூர்

கடலில் மிதக்கும் 17 கொள்கலன்கள்! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

August 1, 2026 · National Tamil LK

கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இவ்விபத்து வட அட்சரேகை 06 54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079 32′ அருகிலுள்ள கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. 

தற்போதுள்ள கடல் நீரோட்டத்தின் தன்மைக்கு ஏற்ப, இந்த காலியான கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி, கரைக்கு மிதந்து வருவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, குறிப்பிட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பயணிக்கும் அனைத்துப் நெடுநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளும் இது குறித்து மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

ஒருவேளை மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் தென்பட்டால், உடனடியாக அது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related Stories

Explore More ›