73 வயது இந்திய கைதி மரணம்!

நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையின் போது, இந்திய நாட்டவரான கைதி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 73 வயதான இந்திய நாட்டவர் என்றும், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த நேரம் தேவைப்பட்டதால், அவரது மரணம் குறித்த செய்தி வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், தற்போது பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும், அந்த கைதி 2025 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Follow & Share




