இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருணாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருணாகல் மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 25-35 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.




