ஒரிரவு கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி தனது ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தி 8.75% ஆக நிர்ணயித்துள்ளது.
இந்தத் தீர்மானம் நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார நிலவரங்கள், பணவீக்க அபாயங்கள் மற்றும் எதிர்கால சந்தை மாற்றங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்த பின்னரே இந்த வட்டி உயர்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதத்தில் ஒரிரவு கொள்கை வட்டி வீதம் 7.75% ஆகவே தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow & Share




