உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மனு: தீர்ப்பு 23-ஆம் திகதி அறிவிக்கப்படும்!

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்த உத்தரவு, எதிர்வரும் 23-ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்றைய தினம் குறித்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள், இது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 23-ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்தனர்.
Follow & Share




