மாணவர்களின் எதிர்காலத்திற்கான முக்கிய கண்காட்சி!

ஜூலை 30ஆம் திகதி, கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமான ‘Sri Lanka Skills Expo 2026’ கல்விக் கண்காட்சியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
‘Skills for Life’ எனும் தலைப்பில் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்படும் ‘Sri Lanka Skills Expo 2026’ கல்விக் கண்காட்சி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, விவசாயத் துறை சார் திறன் சபை, கைத்தொழில் திறன் சபை, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘Sri Lanka Skills Expo 2026’ கல்விக் கண்காட்சியை அக்டோபர் 23, 24 மற்றும் 25ஆம் திகதிகளில், கொழும்பு 07, விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், எதிர்வரும் ஆண்டுகளுக்கான கல்வித்துறை சார் முதலீடுகள், குறிப்பாகத் தொழிற்கல்விக்காகப் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை வெறும் கருத்தாக்கத்திற்கு அப்பால் சென்று நடைமுறைப்படுத்துவதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தொழிற்கல்வி என்பது ஒரு மாற்றுத் தெரிவு எனும் எண்ணக்கருவை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், அனைத்துப் பாடத்துறைகளும் வேலைவாய்ப்புகள், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியுடன் தொடர்புபடுவது போன்றே தனிநபர் வளர்ச்சிக்கும் தொடர்புபடுகின்றன எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு கல்விக் கண்காட்சி நாட்டின் அபிவிருத்திக்கும் சமூக முன்னேற்றத்திற்குமான ஒரு சந்தர்ப்பமாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் இளஞ்சந்ததியினருக்கு, குறிப்பாக அனைத்துப் பிரதேசங்களையும் சார்ந்த பாடசாலை மாணவர்களுக்கு இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விராய் கெலி பல்தசார், இராஜதந்திரப் பிரதிநிதிகள், அபிவிருத்திப் பங்காளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




