இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதி கிறிசி ஹௌலகன் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சி, கல்வி, ஆளுகை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கையின் ஆடைத் துறை வளர்ச்சிக்கு அமெரிக்கா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுக்குச் சஜித் பிரேமதாச தனது நன்றியைத் தெரிவித்ததோடு, நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அமெரிக்கத் தூதுக்குழுவும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.




